×

சிரிப்பு வில்லனாக நடித்தது ஏன்? கே.எஸ்.ரவிகுமார்

சமீபத்தில் வெளியான நான் சிரித்தால் படத்தில் வில்லனாக நடித்துள்ளார், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ரஜினிகாந்த் பாராட்டிய கெக்க பெக்க என்ற குறும்படத்தை திரைப்படமாக உருவாக்குகிறோம் என்று சொன்னதும், குறும்படத்தை பார்த்துவிட்டு, இதில் நான் நடிப்பது போன்ற கேரக்டர் இல்லையே என்று தயங்கினேன்.

பிறகு எனக்காக டில்லி பாபு என்ற கேரக்டரை உருவாக்கியதாக சொன்னார்கள். நான் வில்லனாக நடிக்க வேண்டுமா என்று கேட்டேன். உடனே ஹிப்ஹாப் ஆதி, சிரிப்பு வில்லன் என்று சொன்னார். ஆதி கேரக்டரை போல் நிஜத்திலும் நான் நிறையபேரை சந்தித்துள்ளேன். எனவேதான் வில்லனாக நடிக்க சம்மதித்தேன்’ என்றார்.

Tags : villain ,
× RELATED நயன்தாராவின் வில்லன்