×

பரதநாட்டிய கலைஞராக அனுபமா

சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தை இயக்கி முடித்துள்ள ஆர்.கண்ணன், அடுத்து பூமராங் படத்துக்கு பிறகு அதர்வா நடிக்கும் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இப்படத்துக்கு தள்ளிப் போகாதே என்று பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் வெளியான நின்னுகோரி என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இதில் அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதை இது. பிஎச்டி பட்டதாரியாக அதர்வா, பரத நாட்டிய கலைஞராக அனுபமா நடித்துள்ளனர். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். விரைவில் இரு படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கண்ணன் தெரிவித்தார்.

Tags : Anupama ,Bharatanatyam Artist ,
× RELATED விரக்தியில் அனுபாமா பரமேஸ்வரன்