×

நயனுக்காக வெயிட் குறைக்கும் சேதுபதி

சராசரி வெயிட்டுடன் இருந்த விஜய்சேதுபதி சமீபத்தில் வெளிவந்த சங்கத்தமிழன் உள்ளிட்ட ஒன்றிரண்டு படங்களில் கூடுதல் வெயிட் போட்டிருந்ததுபோல் தோற்றம் அளித்தார். தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்திருந்தார். கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். அதேகூட்டணி விரைவில் இணைகிறது.

கூடுதலாக சமந்தாவும் இணைந்து நடிக்கவிருக்கிறார். இப்படத்துக்கு காத்துவாக்குல ரெண்டு காதல் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ‘2 வருடத்துக்கு முன்பு இப்படத்தின் ஸ்கிரிப்ட் ரெடியானது. அதனை கேட்ட விஜய்சேதுபதி, நயன், சமந்தா மூவரும் உடனே நடிக்க சம்மதித்தனர். இப்படத்தின் டைட்டிலே கதையை சொல்லிவிடும். விஜய்சேதுபதி தான் ஏற்கும் கதாபாத்திரத்துக்காக உடல் எடையை குறைக்கிறார்’ என்றார் விக்னேஷ் சிவன்.

Tags : Nayan ,
× RELATED சிக்லெட் 2கே கிட்ஸ்