×

உடல் எடையை குறைக்க முடியாமல் திணறும் ஹீரோயின்

எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று ஒரு படத்தில் விவேக் காமெடி வசனம் பேசுவார். சில மாஜி ஹீரோயின்களை பார்க்கும்போது அந்த வசனம்தான் ஞாபகத்துக்கு வருகிறது. தம் என்ற படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தவர் ரக்‌ஷிதா. பின்னர் மதுர படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். கனக்கச்சிதமான தோற்றத்தில் இருக்கும் ரக்‌ஷிதா கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர் கர்நாடகாவுக்கே திரும்பி சென்றார்.

கன்னட நடிகர் பிரேம் என்பவரை மணந்தார். இதையடுத்து அரசியலில் குதித்தார். தேர்தலிலும் போட்டியிட்டார். மற்ற விஷயங்களில் கவனம் செலுத்திய ரக்‌ஷிதா தனது உடல் தோற்றத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்தவில்லை. கடந்த 2007ம் ஆண்டில் நடிப்புக்கு முழுக்கு போட்டார். அதன்பிறகு டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளர், நடுவர் என்று தனது நேரத்தை கழித்தார். ஒரு கட்டத்தில் படம் தயாரிக்க முடிவு செய்தார்.

ஜோகய்யா, டிகே என்ற 2 கன்னட படங்களை தயாரித்த ரக்‌ஷிதா தற்போது ஏக் லவ் யா என்ற படத்தை தயாரித்திருக்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டரில் ஹீரோ, ஹீரோயினுடன் பீர் கோப்பை வைத்தபடி ரக்‌ஷிதா போஸ் தந்திருக்கிறார். அதில் ரக்‌ஷிதாவின் தோற்றம் ரசிகர்களின் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. ஏகத்துக்கு வெயிட் போட்டு குண்டான தோற்றத்திலிருக்கும் அவரை நெட்டிஸன்கள் வறுத்தெடுக்கின்றனர். ரக்‌ஷிதாவும் தனது உடல் எடையை குறைக்க எவ்வளவோ போராடியும் பலன் அளிக்காததால் தவிப்புக்குள்ளாகியிருக்கிறார்.

Tags :
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்