×

மாஜி காதலன் பற்றி பேச மறுத்த ராஷ்மிகா

கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார் ராஷ்மிகா. தமிழில் இவருக்கு இது அறிமுகபடமென்றாலும் ஏற்கனவே விஜயதேவரகொண்டாவுடன் அவர் நடித்த டியர் காம்ரேட் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. அதில் ராஷ்மிகாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. போதும் போதும் என்றவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் வந்தாலும் சர்ச்சைகளும் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருமான வரி நோட்டீஸ் அனுப்பினார்கள்.

தற்போது மற்றொரு தர்மசங்கட சூழலில் ராஷ்மிகா சிக்கினார். பீஷ்மா என்ற தெலுங்கு படத்தில் நடிகர் நிதின் உடன் நடிக்கிறார் ராஷ்மிகா. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொகுப்பாளர் நிதினிடம் உங்கள் காதல் அனுபவத்தை பகிருங்கள் என்று கேட்டார். அதற்கு நிதின் தனது காதலியின் பெயர், அவரை மணக்க உள்ள தகவல் வரை தெரிவித்து அப்ளாஸ் பெற்றார்.

பின்னர் ராஷ்மிகாவிடம், உங்கள் காதல் அனுபவத்தை பகிருங்கள் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார். ஏற்கனவே கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அந்த திருமணத்தை ரத்து செய்துவிட்டார். ராஷ்மிகாவின் காதல் தோல்வியில் முடிந்தது. இதை பொது மேடையில் பகிர்ந்துகொள்ள விரும்பாத ராஷ்மிகா, தொகுப்பாளரின் கேள்வியை தொடர்ச்சியாக தவிர்த்து அடுத்த கேள்விக்கு பதில் அளிக்க தயாராக இருந்தார். ஆனாலும் தொகுப்பாளர் விடாப்பிடியாக அதே கேள்விகேட்டு ராஷ்மிகாவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார்.

Tags : Rashmika ,lover ,
× RELATED இனி பிரியாணி சாப்பிட மாட்டேன்; ராஷ்மிகா திடீர் முடிவு