×

வரிசை கட்டும் மாற்றுத்திறனாளி படங்கள்

திகில் படங்களின் பரபரப்பு ஓயாத நிலையில் மாற்றுத் திறனாளி திரைப் படங்கள் வரிசை கட்டத் தொடங்கி உள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படமும் பார்வையற்ற இளைஞனின் கதையாக உருவானது. தற்போது அனுஷ்கா, ‘நிசப்தம்’ படத்தில் காது கேளாத, வாய் பேசாத நபராக நடித்து வருகிறார்.

இதையடுத்து மாற்று திறனாளி படமாக உருவாகிறது மாருதம். இதில் காதுகேளாத குறைபாடுள்ள ஒரு பெண் முன்னணி பாடகியாக ஆவதற்கு எவ்வளவு கடினமான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை மையமாக வைத்து உருவாகிறது. இதில் சிவா நந்தினி மாற்று திறனாளியாக நடிக்கிறார். ஜீவா, அர்ஜுன் ரவி, ராமசாமி, ரூபா, சத்யா, அன்புமணி, பேபி தர்ஷினி, பேபி சின்ரெல்லா ஆகியோர் நடிக்கின்றனர். ஆர்.இளமாறன் எழுதி இயக்குகிறார். பாடல்கள் எழுதி தயாரிக்கிறார் சதாமுருகன். சாமுவேல் தேவநேசன் இசை. இதன் படப்பிடிப்பு நாமக்கல், பரமத்திய வேலூர் ஈரோடு கோபி ஆகிய இடங்களில் நடந்துள்ளது.

Tags :
× RELATED சூர்யாவின் தயாரிப்பில் ரம்யா பாண்டியன்