×

ரைசாவிடம் அதிர்ச்சி கேள்வி கேட்ட ரசிகர்: சன்னி லியோன் ஆயிட்டீங்களா?

ஆபாச வீடியோக்களில் நடித்து தற்போது திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார் சன்னி லியோன். தனது வாழ்க்கை கதையாக உருவாகும் படத்திலும் நாயகியாக நடிக்கிறார். அடிக்கடி நெட்டில் டாப்லெஸ், முத்தக் காட்சி, கவர்ச்சி படங்களை வெளியிட்டு தன்னை அந்த வருடத்தின் அதிகம் தேடப்பட்ட நபர் என்ற பட்டியலில் முதலிடம் பிடிப்பதற்கான டெக்னிக்காக பயன்படுத்துகிறார். அதேபோல் ஒரு சில டெக்னிக்கை நடிகை ரைசா பின்பற்றுவதாக புகார் எழுந்துள்ளது.
பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே படங்களில் ஹரிஸ் கல்யாண் ஜோடியாக நடித்த ரைசவாவுக்கு ஒன்றிரண்டு படங்கள் தவிர பெரியதாக பட வாய்ப்புகள் குவியவில்லை.

இதையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பு தகவலையும் கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் ரசிகர்களை பார்த்து முத்தம் கொடுப்பது உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் சிலர் ரைசாவுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். ஒரு ரசிகர், ‘திடீரென்று உங்கள் படத்தை பார்த்தபோது சன்னிலியோன் என்று நினைத்துவிட்டேன். ஒரே காமெடி போப்பா’ என்று கமென்ட் பகிர்ந்திருக்கிறார். ரசிகரின் இந்த கேள்வி ரைசாவாவுக்கு ஷாக் ஏற்படுத்தி உள்ளது.

Tags : Fans ,Raisa ,Sunny Leone ,
× RELATED மீண்டும் தமிழுக்கு வந்த சன்னி லியோன்