×

கார் ஓட்டும்போது செல்பி; நடிகையின் டிரைவிங் லைசென்ஸ் பறிபோகிறது?

ஒரு காதல் செய்வீர் படத்தில் நடித்ததுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பாக்ஸர் உள்ளிட்ட 2 தமிழ் படங்களில் நடித்து வருகிறார் சஞ்சனா கல்ராணி. இவர் தமிழில் பிரபலமாக இருக்கும் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி. சமீபத்தில் பெங்களூரில் திரைப்படம் ஒன்றிற்கு சென்ற சஞ்சனா, கார் ஓட்டிக்கொண்டே செல்போனை கொண்டு செல்பி வீடியோ எடுத்து அதில் தற்போது மகேஷ்பாபு படம் பார்க்கச் சென்றுக்கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டு நெட்டில் பகிர்ந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது. சஞ்சனாவின் இந்த குறும்புத்தனமும். ஆர்வக்கோளாறும் போலீஸ் கண்ணில்பட்டது. உடனடியாக சஞ்சனா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கார் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது என்ற விதி இருக்கும்போது அதை மீறி செல்பி எடுத்து அதை வீடியோவாக பதிவு செய்தது சட்டத்தை மீறிய செயல். உடனடியாக இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் சஞ்சனா, தற்போது துபாயில் படப்பிடிப்பில் இருப்பதால் தன்னால் இப்போதைக்கு வர இயலாது. பெங்களூர் வந்தவுடன் இதற்கு பதில் அளிப்பதாக கூறி உள்ளார். சஞ்சனா மீது புகார் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், டிரைவிங் லைசென்சும் 3 மாத காலத்துக்கு பறிபோக வாய்ப்புள்ளது.

Tags : Selby ,
× RELATED செல்பி படங்களை பார்த்து போடுங்க…மாணவிகளுக்கு சவுமியா ‘அட்வைஸ்’