×

மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் நடிகர் ரஜினிகாந்த்

உலகம் முழுவதும் பிரபலமான டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற  நிகழ்ச்சி மேன் Vs வைல்ட். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுபவர் பியர் கிரில்ஸ். யாரும் செல்லாத  காட்டுக்குள் சென்று பயணம் செய்வது, பாலைவனத்தில் நடப்பது, தண்ணீரில் குதிப்பது, காடு, வன உயிரினங்களின் தன்மையை விளக்கும் பியர்  கிரில்ஸ் காட்டுக்குள் சிக்கினால் உயிர் பிழைப்பது எப்படி? என்பது குறித்து நிகழ்ச்சி மூலம் விளக்கம் அளிப்பார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கடந்த ஆகஸ்டு மாதம் கலந்து கொண்டு பியர் கிரில்ஸ் உடன் காடுகளில் பயணம் செய்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்துவருகிறது. 2 நாட்கள் நடக்கும் இந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து பங்கேற்கிறார். பிரதமர் மோடிக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் இணையும் இரண்டாவது இந்திய நபர் என்ற பெருமையை ரஜினிகாந்த் பெறுகிறார்.

Tags : Rajinikanth ,
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...