×

நயன்தாராவுக்கு பெயர் வைத்தது யார்?

கோலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் நடிகை நயன்தாரா. அவரது நிஜப் பெயர் டயானா மரியம் குரியன். மனசினக்கரே என்ற படம் மூலம்தான் அவர் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில் டயானாவுக்கு நயன்தாரா என்று நான்தான் பெயர் வைத்தேன் என அப்பட இயக்குநர் ஜான் டிட்டோ ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு இயக்குநர் சத்யன் அந்திக்காடு மறுப்பு தெரிவித்துள்ளார்.

நயன்தாரா என்ற பெயரை தேர்வு செய்தவர் ஜான் டிட்டோ கிடையாது. நானும், இயக்குநர் ரஞ்சன் பிரமோதும்தான் நயன்தாரா என்ற பெயரை தேர்வு செய்து பரிதுரைத்தோம் என தெரிவித்துள்ளார். யார் பெயரை தேர்வு செய்திருந்தாலும் நயன்தாராவுக்கு அந்த பெயர் சினிமாவை பொருத்தவரையில் ராசியாகவே அமைந்துவிட்டது ஆனால் நிஜவாழ்க்கையில் அவருக்கு பல தோல்விகளை தந்திருக்கிறது என்று ரசிகர்கள் கமென்ட் பகிர்ந்திருக்கின்றனர்.

Tags : Nayanthara ,
× RELATED 6 சொகுசு கார்களை வைத்திருக்கும் சமந்தா