×

சைக்கோ - விமர்சனம்

டபுள் மீனிங் புரோடக்சன் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதித்தி ராவ் ஹைதரி, நித்யா மேனன், ராம், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சைக்கோ. பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்யும் அங்குலிமாலி(ராஜ்குமார்). தொடர்ந்து கொலை செய்த பெண்களின் உடலை பொது இடத்தில் தலையில்லாமல் உள்ளாடைகளுடன் விட்டு விட்டுச் செல்வது கொலையாளியின் டிரேட்மார்க். நினைத்தவாறு சைக்கோ கொலையாளி இடம் சிக்கிக் கொள்கிறார் தாகினி( அதிதி ராவ் ஹைதரி). எப்படியும் என்னை காப்பாற்ற கௌதமன் (உதயநிதி ஸ்டாலின்) வருவான் என்ற நம்பிக்கையுடன் தாகினி காத்திருக்கிறார். கொலையாளி யும் எப்படி உன் கௌதம் வருகிறான் பார்ப்போம் என அவனும் இணைந்து காத்திருக்கிறான். கௌதம் என் காதலியே காப்பாற்றினாரா இல்லையா என்பது மிஸ்கின் ஸ்டைல் கிளைமாக்ஸ்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பின் கிராப் நாளுக்கு நாள் பக்குவ நிலையை அடைந்து கொண்டே செல்கிறது. மனிதனுக்கு பிறகு மனிதனுக்கு முன்பு என உதயநிதியின் நடிப்பை நிச்சயம் பிரிக்கலாம் இந்தப்படத்திலும் அவரின் நடிப்பு பாராட்டுக்குரியது. அதிதி ராவ் முந்தைய படத்தை காட்டிலும் இந்த படத்தில் அழகாகவே தெரிகிறார். ஆனால் பெரிய அளவில் அவருக்கு நடிப்பில் வாய்ப்பில்லை .இயக்குனர் ராம் நிச்சயம் ஏதோ புதிதாக செய்வார் என எதிர்பார்க்க வைத்து சின்ன ஏமாற்றத்தை கொடுத்துச் செல்கிறார். படத்தில் அதிகம் ஈர்க்கிறார் நித்யா மேனன் . சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு தன்னுடைய இயலாமையை கோபமாகவும் வெறுப்பாகவும் வெளிப்படுத்துவதும் அவரே இறங்கிவந்து 'உன்னை எனக்கு பிடிச்சிருக்கு' என குழந்தைபோல சொல்வதும் காட்சிகளில் மேலும் அழகு சேர்த்திருக்கிறது.

மிஷ்கின் படங்கள் என்றாலே சற்றே சைக்கோ தனம் மேலோங்கியிருக்கும் இந்தப்படம் பெயரே சைக்கோ என்பதால் படத்தின் கதையும் பாத்திரங்களும் கூட அதே பாணியில் செல்கின்றன. மேலும் கொடூரமாக செய்யப்படும் கொலைகள் பொது இடத்தில் வைக்கப்படும் உடல்கள் என நிச்சயம் பலவீனமான மனநிலை கொண்ட மக்களை காட்சிகள் அசைத்துப் பார்க்கும். சைக்கோவாக நடித்திருக்கும் ராஜ்குமார் கொடுத்த வேலையை சரியாக செய்திருந்தாலும் சைக்கோ கில்லராக ஏதோ ஒன்று அவரிடம் சற்றே மிஸ் ஆகிறது. அதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் மற்றுமொரு பாத்திரங்களாகவே தொடர்கிறது இளையராஜாவின் பின்னணி இசையும் தன்வீர் நீரின் ஒளிப்பதிவும். குறிப்பாக பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவு அற்புதம் எனலாம். உன்ன நெனச்சு பாடல் ராஜா ரசிகர்களுக்கு மட்டுமின்றி இசை ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அன்பளிப்பு எனலாம். மிஷ்கினின் ' என்ற எதிர்பார்ப்பை சற்றே குறைத்துக் கொண்டு படத்திற்கு வந்தால் முடிவில் சற்றே பயம் ஏற்படுத்துவான் இந்த சைக்கோ.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!