×

கமலுக்கு வில்லியாகும் காஜல் அகர்வால்

ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன் கலந்து கொண்டு நடித்து வந்தார் கமல்ஹாசன். இந்தியன் தாத்தா தோற்றத்தில் அவர் நடித்த பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் அவர் காலில் ஆபரேஷன் செய்துகொண்டு ஓய்வு எடுத்தார். சுமார் 1 மாதத்துக்கும் மேலாக ஓய்வில் இருப்பதால் இந்தியன் 2 படம் திட்டமிட்டபடி இந்த ஆண்டு வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஓய்வில் இருக்கும் கமல்ஹாசன் இதுவரை இந்தியன் 2 படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்பது பற்றி முடிவு செய்யாமலிருக்கிறார். அவர் இல்லாத பல காட்சிகளை ஷங்கர் படமாக்கி வந்தார். அடுத்து கமலுடன் முக்கிய கதாபாத்திரங்கள் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்க காத்திருக்கிறார்.
அநேகமாக வரும் பிப்ரவரி மாதம் கமல் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் காஜல் அகர்வால் கமலுக்கு வில்லியாக நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து காஜல் அகர்வால் கூறும்போது,’இந்தியன் 2 படத்தில் எனது கதாபாத்திரம் முற்றிலும் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது. வில்லியாக நடிக்கிறேனா அல்லது வேறு கதாபாத்திரமா என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் நிச்சயமாக பேசப்படும் கதாபாத்திரமாக எனது வேடம் இருக்கும்’ என்றார்.

Tags : Kajal Agarwal ,Kamal ,
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...