×

மோகன்ராஜாவுடன் இணையும் பிரசாந்த்

தனி ஒருவன் இயக்குனர் மோகன்ராஜா தற்போது நடிகராகவும் மாறியிருக்கிறார். விஜய்சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மோகன்ராஜா. புதிய படம் இயக்குவது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார் மோகன்ராஜா. இந்நிலையில் பிரசாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கோலிவுட்டில் தகவல் வெளியாக உள்ளது.

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான படம் அந்தாதுன். இதில் ராதிகா ஆப்தே நடித்திருந்தார். இப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. இப்படத்தில்தான் பிரசாந்த் நடிக்கவிருப்பதாகவும், மோகன்ராஜா இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இருதரப்பிலும் பேச்சு நடக்கிறது.

Tags : Prasanth ,Mohanraja ,
× RELATED நான் முதல்வன் திட்டம் என்...