×

வில்லன் நடிகருக்கு அழைப்பில்லை

புலி, பாகுபலி, நான் ஈ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் கிச்சா சுதீப். இவர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிக்கும், ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தில் நடிக்க இருப்பதாகவும் விரைவில் அதன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் தகவல் பரவியது. இதையறிந்த சுதீப் தனது டிவிட்டர் பக்கத்தில் பதில் அளித்திருக்கிறார்.

‘ஆர்ஆர்ஆர் படத்தில் நடிப்பதை பற்றிய இந்த தகவலை கேட்டு நிறைய பேர் பரவசம் அடைந்தனர். நானும் அதில் நடிக்க ஆவலாகத்தான் இருக்கிறேன். ஆனால் பட தரப்பிலிருந்து என்னை யாரும் நடிக்க கேட்டு அணுகவில்லை. அதுபற்றி பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Tags : villain ,actor ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...