×

விக்ரம் பத்ரா வாழ்க்கையை இயக்குகிறார் விஷ்ணுவர்தன்

தமிழில் வெளியான குறும்பு, அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், பில்லா, ஆரம்பம், யட்சன் ஆகிய படங்களை இயக்கியவர், விஷ்ணுவர்தன். கடந்த சில வருடங்களாக டைரக்‌ஷன் துறையை விட்டு ஒதுங்கியிருந்த அவர், இந்தி படம் இயக்க ஆயத்தமாகி விட்டார். கார்கில் போரில் வீரமரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ரா வாழ்க்கையை மையமாக வைத்து, ஷேர்ஷா என்ற படத்தை அவர் இயக்குகிறார். விக்ரம் பத்ரா கேரக்டரில்  பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். அவரது  ஜோடியாக கியரா அத்வானி நடிக்கிறார். சந்தீப் ஸ்ரீவத்சவா கதை எழுதியுள்ளார். ஜூலை 3ம் தேதி படம் ரிலீசாகிறது.

Tags : Vishnuvardhan ,Vikram Badra ,
× RELATED திருப்பத்தூரில் கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது