×

இந்தி படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கம்

அஜய் தேவ்கன் ஜோடியாக மைதான் இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை பெருமளவில் அவர் குறைத்தார். படத்தின் முதல் ஷெட்யூலில் சில காட்சிகளிலும் கீர்த்தி நடித்தார். இந்நிலையில் திடீரென படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். படத்தை இயக்கும் அமித் ரவிந்திரநாத் சர்மா தரப்பில் கூறும்போது, ‘இந்த கேரக்டர், அஜய் தேவ்கனுக்கு மனைவியாகவும் சிறுவனுக்கு அம்மாவாகவும் நடிக்க வேண்டிய கேரக்டர்.

இதில் கீர்த்தி மிகவும் இளமையாக தெரிகிறார். அதனால் கேரக்டரில் அவர் பொருந்தவில்லை. எனவே பரஸ்பர பேச்சுவார்த்தைக்கு பிறகு படத்திலிருந்து அவரை நீக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷுக்கு பதிலாக பிரியாமணி அந்த வேடத்தில் நடிக்க தேர்வாகியுள்ளார்.

Tags : Removal ,Keerthi Suresh ,
× RELATED அனிமேஷன் வீடியோவுக்கு டப்பிங் பேசிய பிரபாஸ்