×

அட்வைஸா? வாயை மூடு.. இலியானா காட்டம்

விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்ததுடன் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வந்த இலியானா பாலிவுட் மோகத்தில் தென்னிந்திய பட வாய்ப்புகளை உதறிவிட்டு சென்றார். இந்திக்கு போன வேகத்தில் முதல் படம் ஹிட்டானது. ஆனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. புதிய பட வாய்ப்புக்களுக்காக காத்திருந்து கண்கள் பூத்ததுதான் மிச்சம் என்ற நிலையில் இருக்கிறார்.

மேலும் வெளிநாட்டு பாய்பிரண்டுடன் லவ் பிரேக் அப் ஆகி மன உளைச்சலுக்குள்ளானார். இலியானாவின் இந்த நிலைமையை கண்டு சிலர் அவருக்கு அட்வைஸ் செய்யத் தொடங்கினர். என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என்று அவர்கள் வரிசைப்படுத்தியிருந்தனர். ஆனால் இது இலியானாவை கடுப்பில் ஆழ்த்தியது.

அட்வைஸ் செய்தவர்களுக்கு வாயை மூடு என்ற பாணியில் காட்டமாக பதில் அளித்திருக்கிறார். ‘எனக்காக நீங்கள் பில் தொகையை செலுத்தாத வரையில், எனக்காக சிக்கன் வாங்கிதர முடியாத நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று அட்வைஸ் செய்யும் தகுதி உங்களில் யாருக்கும் கிடையாது’ என கூறி உள்ளார் இலியானா.

Tags :
× RELATED சோனியா அகர்வால் நடிக்கும் தண்டுபாளையம்