×

3 மொழி படத்தில் பிரபாஸ்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகிருஷ்ணம் ராஜுவின் கோபி கிருஷ்ணா மூவிஸ், யு.வி கிரியேஷன்ஸ் இணைந்து தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் தயாரிக்கும் புதிய படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அவரது ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதற்கு முன் இவர், தமிழில் வெளியான முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக நடித்திருந்தார்.  

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ராதாகிருஷ்ணா இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வெள்ளிக்கிழமை ஐதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தொடங்கி நடந்து வருகிறது. அதிரடி ஆக்‌ஷன் திரில்லராக இப்படம் உருவாகிறது.

Tags : Prabhas ,
× RELATED மக்களவை தேர்தலால் பிரபாஸ் படத்துக்கு சிக்கல்