×

‘வார்த்தை தவறிவிட்டாய்..’ ராஷ்மிகாவை வெளுக்கும் ரசிகர்கள்

தமிழில் வெளியான டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் (தெலுங்கு) என விஜயதேவரகொண்டா படங்களில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா. அவரது நடிப்பு பாராட்டப்பட்டதுடன் தொடர்ச்சியாக நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஒருமுறை ராஷ்மிகா குறிப்பிடும்போது,’ஒரு பாடலுக்கு வந்து ஆடிவிட்டு காணாமல்போகும் கமர்ஷியல் நடிகையாக நான் இருக்க மாட்டேன்.  நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே நடிப்பேன்’ என்றார்.

அப்போது அருகில் இருந்த விஜயதேவர கொண்டா,’எதிர்காலத்திலும் ராஷ்மிகா இதே பார்முளாவை அதாவது நடிப்பை வெளிப்படுத்தும் பாத்திரமாக ஏற்று நடிக்க வேண்டும். ஸ்டார் ஹீரோவுடன் நடிக்கிறேன் என்று சொல்லி ஒரு பாடலுக்கும், ரெண்டு லவ் சீனுக்கும் நடித்து விட்டு சென்றால் ரசிகர்களின் விமர்சனத்துக்கு உள்ளாவார்’ என எச்சரித்தார். அவரது எச்சரிக்கை இப்போது நிஜமாகியிருக்கிறது.

மகேஷ்பாபு ஜோடியாக ‘சரிலேரு நீகெவ்வரு’ தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார் ராஷ்மிகா. இப்படத்தில் அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு இல்லை. பாடல் காட்சியிலும், லவ் சீனிலும் மகேஷ்பாபுடன் கட்டிப்பிடித்து ஆடிவிட்டு காணாமல்போய் விடுகிறாராம். அதைக்கண்டு ரசிகர்கள் ராஷ்மிகாவை நக்கலடித்து வருகின்றனர். ‘நடிப்பை வெளிப்படுத்தும் வேடத்தில்தான் நடிப்பேன் என்று கூறிய ராஷ்மிகா இப்போது வார்த்தை தவறிவிட்டார்’ என வெளுக்கின்றனர்.

Tags : Rashmika ,fans ,
× RELATED அனிமல் 2ல் ராஷ்மிகா நீக்கமா?