×

கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆன ஜீவா

நட்சத்திர கிரிக்கெட் நடக்கும்போது அதில் விஷால் முதல் ஜீவா வரை பல நடிகர்கள் கிரிக்கெட் வீரர்களாக மாறிவிடுகின்றனர். ரன் எடுக்கிறார்களா என்பதெல்லாம் வேறு விஷயம். தற்போது ஜீவா நிஜ கிரிக்கெட் வீரராக மாறியிருக்கிறார். 1983ம் ஆண்டு இந்திய அணி கபில்தேவ் தலைமையில் முதன்முறையாக உலக கோப்பையை வென்றது. அதில் நம்மூர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தும் விளையாடினார்.

உலக கோப்பையை இந்தியா வென்ற சரித்திர நிகழ்ச்சி தற்போது 83 பெயரில் திரைப்படமாகிறது. இதில் கபில்தேவ் வேடத்தை ரன்வீர் சிங் ஏற்றிருக்கிறார். ஸ்ரீகாந்த் வேடத்தை நடிகர் ஜீவா ஏற்றிருக்கிறார். அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரன்வீர் சிங் வெளியிட்டுள்ளார். ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிப்பதற்காக பலமுறை அவர் ஆடிய ஸ்டைல் பற்றி வீடியோவில் பார்த்து அதை உள்வாங்கிக் கொண்டு இப்படத்தில் நடித்திருக்கிறாராம் ஜீவா.

Tags : Jeeva ,Srikanth ,
× RELATED சிறகன் விமர்சனம்