×

‘ஜோக்கர்’ 11 ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை

92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி 9ம் தேதி நடக்க  உள்ளது. ஆஸ்கார் விருதுகள் பட்டியலில் ஹாலிவுட் படம் ‘ஜோக்கர்’ 11 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் நடித்த ஜாக்குயின் பீனிக்ஸ் மற்றும் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’ படத்தில் நடித்திருக்கும் லியோனார் டோ டிகாப்ரியோ சிறந்த நடிகர்களுக்கான போட்டி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் ‘ 1917’, ‘ தி ஐரிஷ் மேன்’, ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’ ஆகிய படங்கள் முறையே 4 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் ‘மேரேஜ் ஸ்டோரி’ படத்தில் நடித்த ஸ்கார்லெட் ஜான்சன் சிறந்த நடிகைக்கான  விருதுக்கும் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Tags : Joker ,
× RELATED எம்.ஜி.ஆர் ரசிகர் வேடத்தில் கார்த்தி