×

தாராள பிரபு அடல்ட் காமெடி படம் இல்லை; இயக்குனர் தகவல்

8 வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம், விக்கி டோனர். செயற்கை கருத்தரிப்புக்கு விந்து தானம் செய்ததில் ஏற்பட்ட குளறுபடிகளை காமெடியாக சொல்லியிருந்த இப்படம், தாராள பிரபு என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது. ஹரீஷ் கல்யாண், தான்யா ஹோப், விவேக் நடிக்கின்றனர். இயக்குனர் ஏ.எல்.விஜய் உதவியாளர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். அவர் கூறியதாவது:

தெலுங்கில் நாகசைதன்யா, லாவண்யா திரிபாதி நடித்த யுத்தம் சரணம்  படத்தை இயக்கியுள்ள நான், அடுத்த படமாக தாராள பிரபுவை இயக்குகிறேன். முறைப்படி அனுமதி பெற்று தயாராகும் ரீமேக் படம் என்றாலும், படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆகிவிட்டதால், இப்போது சமூகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை கவனத்தில் கொண்டு கதையில் சில மாற்றங்கள் செய்துள்ளோம்.

இந்தி கலாச்சாரத்துக்கும், நமக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதையும் கவனத்தில் கொண்டு, கதையின் மையக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு பல மாறுதல்களுடனும், புதிய விஷயங்களுடனும் இப்படம் தயராகிறது. இது அடல்ட் காமெடி படம் இல்லை. பக்கா பேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகிறது.

Tags : Duke Adult ,
× RELATED பூந்தமல்லி கோரன்டைன் வார்டில் வயதான 3...