×

வெப் தொடர்களில் சுனைனா

தமிழில் முன்பு போல் சுனைனா நிறைய படங்களில் நடிப்பதில்லை. இதற்கு என்ன காரணம்?  திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளாரா என்று நிறைய கேள்விகள் எழுந்த  நிலையில், அவர் கூறியுள்ள பதில் இது. ‘சமீபத்தில் ரிலீசான சில்லுக்  கருப்பட்டி படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் நிலா நிலா ஓடி வா, ஃபிங்கர்டிப் ஆகிய வெப்தொடர்களில்  நடித்துக்கொண்டு இருக்கிறேன்.

இது தெரியாத சிலர், எனக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது போல் வதந்தி பரப்பி வருகின்றனர். நான் வெப்தொடர்களில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் நிறைய சினிமா பட வாய்ப்புகள் வருகிறது. ஆனால், எல்லா படங்களையும் என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. வெப்தொடர்களில் நடித்துக்கொண்டே சினிமாவிலும் நடிப்பேன். எனவே, இப்போது என் திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை’ என்று சுனேனா கூறியுள்ளார்.

Tags :
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்