சித்தார்த் ஜோடியாகும் நிவேதா

தர்பார் படத்தில் ரஜினி மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். மலையாள நடிகையான இவர், தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இப்போது சித்தார்த் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குனர் அமிர்தராஜ் இயக்கும் படத்தில் சித்தார்த் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இதில் ஒரு சித்தார்த்துக்கு ஜோடியாக நிவேதா தாமஸ் நடிக்க இருக்கிறார். இன்னொரு சித்தார்த் ஜோடியாக நடிக்க பிரியங்கா ஜாவல்கரிடம் பேச்சு நடக்கிறது.

Tags : Siddharth ,
× RELATED பிங்க் ரீமேக்கில் நிவேதா