டூ பீஸ் நீச்சல் உடையில் சாலையில் நடமாடிய ரகுல்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் பற்றி கடந்த சில வாரங்களாகவே பரபரப்பான தகவல்கள் வந்த வண்ணமிருக்கிறது. ஐதராபாத்தில் உள்ள பங்களாவை விற்று விட்டு அவர் பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டதாகவும், பட வாய்ப்பு இல்லாததால் சோகத்தில் இருப்பதாகவும், புதிதாக நடித்த படங்கள் வெற்றி பெறாததால் அப்செட் ஆகிவிட்டார் எனவும் வெவ்வேறு வகையான புகைச்சல்கள் கிளம்பின. அதனை மறுத்து ஏற்கனவே பதில் அளித்தார் ரகுல்.

திடீரென்று அவர் டென்ஷன் ஆகும் அளவுக்கு ஒருவர் ஒரு பதிவிட்டிருந்தார். பட வாய்ப்பு குறைந்துவிட்டதால் ரகுல் ப்ரீத் சிங் கூடுதல் வெயிட் போட்டிருக்கிறார் என ஒருவர் கமென்ட் வெளியிட அதை கண்டு டென்ஷன் ஆன ரகுல், தனது உடற்கட்டை ஸ்லிம்மாக வைத்திருப்பதை வெளிப்படுத்த முடிவு செய்தார்.

நீல நிறத்தில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து தலைமுடியை லூஸ் ஹேராக விட்டு கடற்கரை பகுதிக்கு சென்றவர் கிக்கான படத்தை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதுடன், ’திறந்தவெளி சாலையில் ஒரு சுதந்திர பறவையாக இருக்கிறேன்’ என மெசேஜ் பதிவிட்டிருக்கிறார். கடற்கரையில் இருந்து வெகு தூரத்துக்கு நீச்சல் உடையிலேயே நடந்து வந்து கடற்கரை பின்னணியில் புகைப்படங்களை எடுத்து ரகுல் வெளியிட்டிருக்கிறார்.

Tags : Rukul ,road ,
× RELATED விஜய்க்கு இறுக்கி அணைச்சி முத்தம் தந்த விஜய்சேதுபதி