×

நயன்தாராவுக்கு அரசியல் அழைப்பு

அறம் படத்தில் கலெக்டர் வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார். அப்படத்தின் கிளைமாக்ஸில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வருவதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அப்போது முதலே நயன்தாரா அரசியலுக்கு வரவுள்ளதாக பேச்சு அடிப்பட்டு வந்தது. அம்மா கட்சியும் அவருக்கு அழைப்பு விட்டிருந்ததாம். தற்போது பாஜ கட்சி அழைப்பு விட்டிருக்கிறதாம்.

மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்க உள்ளதால் சமீபத்தில் கன்னியாகுமரிக்கு சென்று பகவதி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்தார் நயன்தாரா. கோயில் விசிட் மேற்கொண்ட நயனை உள்ளூர் பாஜ தலைவர் சந்தித்து தங்கள் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுக்க அதைக்கேட்டு லேசான புன்னகையுடன் பதில் எதுவும் சொல்லாமல் நழுவிவிட்டாராம் நயன்தாரா.

Tags : Nayanthara ,
× RELATED புயல் - மழை பேரிடரிலிருந்து நம் மக்களை...