×

எனக்கு இவர் மீது தான் ஈர்ப்பு உள்ளது; நடிகை ரித்விகா

கபாலி படத்தில் ரஜினியுடன் நடித்தவர் ரித்விகா. மேலும் மெட்ராஸ், அஞ்சலா, ஒரு நாள் கூத்து, சிகை, குண்டு போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். திரையுலகில் பல படங்களில் நடித்தாலும் இன்னும் பரபரப்பான ஹீரோயின் என்ற இடத்தை ரித்விகாவால் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரும் சில நடிகைகள்போல் காதல் பட்டாசு கொளுத்தி போட ஆரம்பித்திருக்கிறார்.

சமீபத்தில் அவரிடம், உங்களுக்கு எந்த நடிகர் மீதாவது ஈர்ப்பு இருக்கிறதா?’ என்றபோது பட்டென, ‘ஆமாம் விஜய்சேதுபதி மீது எனக்கு ஈர்ப்பு இருக்கிறது. அதேபோல் ஜெய்சங்கர் மீதும் ஈர்ப்பு இருந்தது’ என்றார். ரித்விகாவின் இந்த ஈர்ப்பு கமென்ட் நெட்டிஸன்கள் மத்தியில் பெரிதாக பற்றிக்கொள்ளவில்லை. விஜய்சேதுபதிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஜெய்சங்கர் மறைந்துவிட்டார்.

சொல்றதுதான் சொல்றீங்க ஏதாவது சூடான விஷயமாக சொன்னால் தானே எடுபடும் என்று சிலர் ரித்விகாவுக்கு அட்வைஸ் தந்திருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை சாய் தன்ஷிகா தனக்கு சிம்பு மீது ஈர்ப்பு இருப்பதாக சொல்லி ஒரு பரபரப்பு ஏற்படுத்தினார் அதேபோல் ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங் போக வேண்டும் என்று ஆசையை வெளிப்படுத்திய நடிகை ரைசாவும் பரபரப்புக்குள்ளானார்.

Tags : Rithvika ,crush ,
× RELATED ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மீது...