×

3 மாதம் ரெஸ்ட்; பிருத்விராஜ் திடீர் முடிவு

நடிகர் பிருத்விராஜ் மலையாள திரைப்பட நடிகராக இருந்தாலும் தமிழிலும் ஒரு இடத்தை தனக்கென பிடித்து வைத்திருக்கிறார். மொழி, அபியும் நானும், கண்ணாமூச்சி ஏனடா,  நினைத் தாலே இனிக்கும் போன்ற பல படங்களில் நடித்தவர் சமீபகாலமாக மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கம் முதல் நடிப்பில் பிஸியாக இருந்த பிருத்வி பட தயாரிப்பிலும் ஈடுபட்டார். லுசிபெர் என்ற படத்தை இயக்கினார். மேலும், டிரைவிங் லைசென்ஸ் உள்பட 3 படங்களில் நடித்திருக்கிறார்.

நடித்து களைத்துப்போன பிருத்விராஜுக்கு ரெஸ்ட் தேவைப்படுகிறதாம். இதனால் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட 3 மாதம் நடிப்புக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார். ‘வரும் 3 மாதம் சினிமாவிலிருந்து முழுமையாக ஓய்வு எடுக்க உள்ளேன். இதுவொரு சின்ன இடை வெளிதான். அடுத்து எனது நீண்ட நாள் ஆசையாக உள்ள ஆடுஜீவிதம் படத்திற்காகவும் இந்த ஓய்வு தேவைப்படுகிறது’ என்றார் பிருத்விராஜ்.

Tags : end ,Prithviraj ,
× RELATED காலில் அறுவை சிகிச்சை: கமல் கட்டாய ஓய்வு