கடற்கரையில் நீச்சல் உடையில் ஷெரின் உல்லாசம்

கன்னடத்திலிருந்து தமிழில் நடிக்க வந்தவர் ஷெரீன். தமிழில் பேசப்படும் நடிகையாக வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் திடீரென்று காணாமல் போனார். துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த இவர் தொடர்ந்து ஜெயா, ஸ்டுடன்ட் நம்பர் 1, பூவா தலையா, நண்பேன்டா போன்ற பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் கடந்த 5 வருடமாக தமிழ், கன்னடம் எந்த படத்திலும் தலைகாட்டவில்லை.

தற்போதைக்கு கோலிவுட்டில் இளவட்ட நாயகிகள் அதிரடியாக நுழைந்து நீயா நானா என்று போட்டிபோட்டுக்கொண்டிருக்கும் போது திடீரென்று நானும் இருக்கிறேன் என்று களத்தில் குதித்திருக்கிறார் ஷெரின். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி படங்கள், சேலை கட்டிய அம்சமான படங்கள், செல்லப் பிராணியுடன் கொஞ்சல் என விதவிதமான படங்களை வெளியிட்டு வரும் ஷெரின், இயக்குனர்களின் பார்வைக்காக விதவிதமான காஸ்டியூம் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில் கடற்கரைக்கு சென்ற ஷெரின் அலைகளில் நீந்தி விளையாடிய கவர்ச்சி படங்களை வெளியிட்டுள்ளார். ஆனால் ஏற்கனவே பல நடிகைகள் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து படுகவர்ச்சியான படங்களை வெளியிட்டு வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் ஷெரினின் இந்த சிங்கிள் பீஸ் கவர்ச்சி அவருக்கு பட வாய்ப்ைப பெற்றுத்தருமா என்பதுதான் கேள்வியாக உள்ளதாக சிலர் கமென்ட் வெளியிட்டுள்ளனர்.

Tags : Sherin ,beach swimming ,
× RELATED பூங்காவில் குவியும் மாணவர்கள் கல்வி சுற்றுலாவால் களைகட்டுகிறது