ஸ்ரேயாவுக்கு லண்டன் போலீஸ் எச்சரிக்கை

ஆர்.மாதேஷ் இயக்கும் படம், சண்டக்காரி. இதில் சாஃப்ட்வேர் நிறுவன அதிகாரி வேடத்தில் ஸ்ரேயா, இன்ஜினீயர் கேரக்டரில் விமல் நடிக்கின்றனர். இப்படத்துக்காக லண்டன் ஸ்டேன்போர்ட் ஏர்போர்ட்டில் விமல், ஸ்ரேயா, சத்யன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு  மிகுந்த குடியுரிமை பகுதியை தாண்டி ஸ்ரேயா நடந்து சென்றார். உடனே அங்கு இருந்த துப்பாக்கி ஏந்திய லண்டன் போலீசார், அதிரடியாக ஸ்ரேயாவை சூழ்ந்துகொண்டனர்.

‘உரிய ஆவணங்கள் இல்லாமல், எப்படி குடியுரிமை பகுதியை தாண்டி வந்தீர்கள்?’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தனர். ஸ்ரேயா செய்வதறியாமல் திகைத்து  நின்றார். அவரது பதற்றதை பார்த்து ஓடி வந்த விமல், தன்னிடம் இருந்த உரிய ஆவணங்களை காட்டி, ‘இங்கு நாங்கள் உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்த வந்துள்ளோம்’ என்று சொன்னார். இதையடுத்து போலீசார், ஸ்ரேயாவை எச்சரித்து அனுப்பினர்.

Tags : London ,Shreya ,
× RELATED லண்டன் நகரில் ஹாரோ தமிழ் சமூக சங்கம்...