×

தலைவி, குயின் படங்களுக்கு தடையில்லை

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தும் தலைவி படம் மற்றும் குயின் இணையதள தொடருக்கு தடையில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி பெயரில் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. சமீபத்தில் ஜெயலலிதா வேடத்தில் அவர் நடித்த டீஸர் வெளியானது.

இதனிடையே ஜெயலலிதா வாழ்க்கையை இயக்குனர் கவுதம் மேனன் குயின் என்ற பெயரில் வெப் சீரிஸாக இயக்கி வருகிறார். ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். குயின் படத்தின் டிரெய்லர் வெளியாகியது. இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் தலைவி, ஜெயா, குயின் ஆகியவற்றை தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும், திரையிடவும் தடை விதிக்க கோரி ஜெ.தீபா சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படும்தும் தலைவி படம் மற்றும் குயின் இணையதள தொடருக்கு தடையில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெ.தீபா பற்றி குயின் இணையதள தொடரில் காட்சிகள் ஏதும் இல்லை என்று இயக்குனர் கௌதம் மேனன் தரப்பில்  உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மேலும் படம் கற்பனையானது என்று அறிவிப்பு வெளியிட தலைவி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Tags : Queen ,
× RELATED தியேட்டரில் வெளியான புது படங்கள்...