×

இந்துஜாவை அதிர வைத்தது யார்?

விஜய் நடித்த பிகில் படத்தில் சிங்கபெண்களில் ஒருவராக கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து கவனத்தை கவர்ந்த இந்துஜா மேலும் மேயாத மான்,  பூமராங், பில்லா பாண்டி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இயக்குனர்கள் கதை சொல்ல வந்தால் கமர்ஷியல் படங்களில் தான் நடிப்பேன். விருது படங்களில் நடிக்க விரும்பவில்லை என சொல்வதாக நெட்டில் பரவியது.

அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த இந்துஜா, ‘சினிமாவை பைத்தியக்காரத் தனமாக காதலிப்பவள் நான். நீங்கள் சொன்னதுபோல் மோசமான ஒரு விஷயத்தை நான் சொன்னதே இல்லை. ஊடகங்கள் மிகவும் வலிமையான வை. அவைதான் சினிமாவின் முதுகெலும்பு என நம்புகிறேன். அதில்  வெளியாகும் செய்திகள் உண்மை அப்பாவி மக்கள் நம்புகிறார்கள். ஏதோ எழுத வேண்டுமே என்பதற்காக எதையாவது எழுதாதீர்கள். வார்த்தைகள் அதிகம் காயப்படுத்தும்’ என தெரிவித்திருக்கிறார்.

Tags : Hinduja ,
× RELATED பார்க்கிங் இயக்குனருக்கு தங்க காப்பு பரிசளித்த ஹீரோ