×

சவால் வேடத்தால் உருமாறிய நடிகை

ஹீரோக்களை சுற்றி வந்து டூயட் பாடுவது மட்டுமல்லாமல் சீனியர் ஹீரோயின்கள் தங்கள் வயதுக்கு ஏற்ப கதைகளை தேர்வு செய்கின்றனர். அதுபோல் இளம் நடிகைகளும் அதுபோன்ற கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். கோலிவுட்டில் நடிகை சாவித்ரி வாழ்க்கை படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். இந்த படத்திற்காக அவர் உடல் எடையை அதிகரித்தார். தண்ணி அடிப்பதுபோல் நடித்திருந்தார். இந்த வேடத்திற்காக அவர் தேசிய விருது பெற்றார். பாலிவுட்டிலும் ஹீரோயின்கள் சவாலான வேடங்களை தேர்வு செய்து நடிக்கின்றனர்.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் வாழ்க்கை கதை இந்தியில் சாபாக் பெயரில் உருவாகிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகை, தான் யார் என்பதை அடையாளம் தெரியாத அளவுக்கு விகாரமாக மேக் அப் அணிந்து நடிக்க வேண்டியிருந்தது. ஒரு சில நடிகைகள் இந்த வேடத்தை ஏற்க மறுத்தபோது முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் நடிக்க ஒப்புக்கொண்டார். மேக்னா குல்சர் இயக்குகிறார்.

இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. அதைப்பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் அதிர்ச்சி அடைந்ததுடன் இப்படியொரு கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்த தீபிகாவுக்கு பாராட்டுகளை அள்ளிக் குவித்தனர். நடிகர் ஆமிர்கான் கூறும்போது,’கிரேட் டிரெய்லர். இதுவொரு முக்கியமான படம். இயக்குனர் மேக்னா, தீபிகாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டிருந்தார். நடிகை அலியா பட்,’இரண்டு பெண்கள் (மேக்னா-தீபிகா)ரொம்பவும் ஸ்பெஷலானவர்கள்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Tags : Actress ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...