×

ரொமான்டிக் ரவுடி யோகி பாபு

தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டார். இவற்றில் காமெடி ஹீரோவாக நடித்த யோகிபாபு அடுத்து 50/50 என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். புதுமுக நடிகை ஜோடியாக நடிக்கிறார். இளம் பெண்கள் மீது காதல் பார்வை வீசி கரெட்க் செய்ய பார்க்கும் யோகிபாபுவின் காட்சிகள் படமானது. படம் பற்றி இயக்குனர் கிருஷ்ணா சாய் கூறும்போது, ‘திகில் கலந்த காமெடி படமாக உருவாகும் இதில் யோகிபாபு நகைச்சுவையுடன் ரொமான்டிக் ரவுடியாக வருகிறார்.

மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன், நந்தா சரவணன், மயில்சாமி, சாமிநாதன், மதன்பாப் என பலர் நடித்துள்ளனர். பிரதாப் ஒளிப்பதிவு. தரண் இசை. விஎன்ஆர் தயாரிப்பு. யோகிபாபுவுக்காக கோலமாவ் கோகிலா என்ற பாடலை பூவையார் பாடி உள்ளார். இது டிரெண்டிங் ஆகிவிருக்கிறது’ என்றார்.

Tags : Romantic Rowdy Yogi Babu ,
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்