×

நித்யாவிற்கு 2வது திருமணம்

நித்யாவிற்கு இரண்டாவது திருமணம் என்றதுடன் இதுவரை திருமணமே ஆகாமல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நித்யா மேனனுக்கா 2வது திருமணம் என்று ஆச்சர்யப்படாதீர்கள். அவர் இல்லை. இந்த நித்யா டி.வி.சீரியல்களில் வருபவர். நந்தினியில் கங்கா கதாபாத்திரத்தில் நடித்ததுடன், லட்சுமி ஸ்டோர் சீரியலிலும் நடித்திருந்தார்.

நித்யாராமுக்கு கடந்த 2014ம் ஆண்டு வினோத் கவுடா என்பவருடன் திருமணம் நடந்தது. கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் ஆஸ்திரேலியா தொழில் அதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். அவருக்கு சக நடிகர், நடிகைகள் வாழ்த்து கூறி உள்ளனர்.

Tags : Nithya ,
× RELATED சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்