சீனியர் நடிகருடன் காதல்? இளம் நடிகை செம மூட்

பஞ்சாபி, இந்தி, தெலுங்கு படங்களை தொடர்ந்து தமிழில் கே.எஸ்.அதியமான் இயக்கும் ஏஞ்சல் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் பாயல் ராஜ்புத். இவர் தெலுங்கில் வெங்கடேஷ், நாக சைதன்யா நடித்துள்ள வெங்கி மாமா படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அதில் பட குழுவினருடன் பாயல் பங்கேற்றார். அவர் பேசும்போது,’குறுகிய காலத்தில் வெங்கடேஷுடன் நடிக்கும் வாய்ப்பை எனக்கு இப்படத்தில் தந்திருக்கின்றனர். ஐ லவ் யு வெங்கடேஷ்’ என்றார்.

அதைக்கேட்டதும் ரசிகர்கள் பலத்த கைதட்டல் தந்து விசில் அடித்தனர். இதில் உஷாரான பாயல், ெவங்கடேஷ், நாக சைதன்யாவை மட்டுமல்ல ஒவ்வொருவரையும் காதலிக்கிறேன் என்று பேசி சமாளித்தார். பின்னர் பேசிய நடிகை ராசி கண்ணா,’பாயல் ராஜ்புத் பேசியதற்கு எல்லோரும் ஆரவாரம் செய்தனர். அவர் தனது இணைய தள பக்கத்தில் வெங்டேஷ் மீதான அன்பை பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார். தற்போது பொது மேடையில் அதை தெரிவித்தார்’ என்றார்.

Tags : actor ,actress ,
× RELATED கடலில் விழப்போன காமெடி நடிகரை காப்பாற்றிய நடிகை