×

ஷூட்டிங்கில் பங்கேற்காமல் அடிக்கடி வெளிநாடு செல்லும் ஹீரோ; ரகசிய காதலியுடன் சந்திப்பா?

பாகுபலி ஹீரோ பிரபாஸும் நடிகை அனுஷ்காவும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசுக் கப்பட்டு வருகிறது. அதை இருவருமே மறுத்துள்ளனர். தற்போது பிரபாஸ் பற்றி புதிய கிசுகிசு பரவி வருகிறது. அடிக்கடி அவர் வெளிநாடு செல்கிறார் என்று திரையுலகில் பேச்சு எழுந்துள்ளது. சாஹோ படத்தில் நடித்து முடித்த பிறகு பிரபாஸ் லண்டன் சென்றார். அவருடன் இயக்குனர் ராஜமவுலி மற்றும் நடிகை அனுஷ்காவும் சென்றிருந்தனர். அங்கு சுற்றுப் பயணம் முடிந்தபிறகு ஐதராபாத் திரும்பினர்.

அனுஷ்கா, தான் நடித்து வரும் நிசப்தம் படப்பிடிப்பில் பங்கேற்றார். பிரபாஸ் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு கால்ஷீட் கொடுத்தார். இப்படத்தை ராதாகிருஷ்ணா இயக்குகிறார். இப்படத்துக்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்புக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் பிரபாஸ் திடீெரன்று வெளிநாடு புறப்பட்டு சென்றுவிட்டார். விடுமுறை பயணமாக அவர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பில்கூட பங்கேற்காமல் அவர் அவசரமாக வெளிநாடு சென்றது ஏன்? சமீபகாலமாக அவர் அடிக்கடி வெளிநாடு செல்வது எதற்காக என்று சிலர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

வெளிநாட்டு பெண் யாரையாவது பிரபாஸ் ரகசியமாமக காதலிக்கிறாரா என்றும் சிலர் கிளப்பி விட்டுள்ளனர். இன்னும் சிலர் சமீபத்தில் அனுஷ்கா உடல் எடை குறைப்பு சிகிச்சை பெற அமெரிக்கா புறப்பட்டு சென்றார். தற்போது பிரபாஸும் வெளிநாடு சென்றிருக்கிறார் என்று இருவருக்கும் காதல் முடிச்சு போட முயன்றிருக்கின்றனர்.  பிரபாஸ் அல்லது அனுஷ்கா இருவரில் யாருக்காவது ஒருவருக்கு திருமணம் முடியும் வரையில் அவர்களின் காதல் கிசுகிசு ஓயாது என்கிறது நெருக்கான வட்டாரங்கள்.

Tags : hero ,shooting ,
× RELATED சவுகார்பேட்டை துப்பாக்கிச் சூடு சம்பவம்: மேலும் ஒருவர் கைது