நயன்தாரா மீது அதிருப்தி

நடிகை நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கு வருவதில்லை என்ற பாலிசி கடைபிடிக்கிறார். எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் இந்த பாலிசியை அவர் பின்பற்றுகிறாராம். சமீபத்தில் நடந்த சம்பவங்களை திரையுலகினர் சுட்டிக் காட்டி இப்படி செய்யலாமா நயன்தாரா என கேட்டிருக்கின்றனர். சிரஞ்சீவி நடித்த சை ரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்த நயன்தாராவை அப்படத்தின் புரமோஷனுக்கு வரும்படி பட தரப்பினர் அழைத்தனர்.

ஆனால் தன்னால் புரமோஷனில் பங்கேற்க முடியாது என்று கறாராக கூறிவிட்டார். ஆனால் அதே படத்தில் நடித்த நடிகை தமன்னா ஒவ்வொரு ஊரில் நடந்த அப்பட புரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். பின்னர் விஜய் நடித்த பிகில் படத்தில் நயன்தாரா நடித்திருந்தார்.

இந்த படத்தின் புரமோஷனுக்கு நயன்தாரா வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த புரமோஷனுக்கும் நயன்தாரா வரவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த ரஜினியின் தர்பார் பட புரமோஷனுக்கு அப்பட கதாநாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால் அவர் மீது திரையுலகினர் அதிருப்தி அடைந்திருக்கிறார்களாம்.

Tags : Nayanthara ,
× RELATED நயன்தாராவுக்கு பெயர் வைத்தது யார்?