×

ஜெனிலியா வாழ்க்கையில் கடினமான தருணம்

சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், சென்னை காதல், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஜெனிலியா. இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதல் திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகிவிட்டார். திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்குபோட்டார் ஜெனிலியா. ஆனாலும் திரையுலகினரின் தொடர்பை விடாமல் தொடர்ந்து வருகிறார். சமீபத்தில்கூட மும்பையில் நடந்த ஹவுஸ்புல் 4 என்ற படத்தின் வெற்றி விழா பார்ட்டியில் தனது கணவருடன் பங்கேற்றார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் தனது பிள்ளையின் பிறந்த நாள் அன்று கடிதம் எழுதி தனது வாழ்த்தை தெரிவித்த ஜெனிலியா தற்போது தனது தாயின் பிறந்த நாளில் கடிதம் எழுதி வாழ்த்து கூறியிருக்கிறார். அதில்,’அன்புள்ள அம்மா, என் வாழ்வில் நான் சந்தோஷமான தருணத்தையும், கடினமான தருணங்களையும் கண்டிருக்கிறேன்.

எந்த தருணமாக இருந்தாலும் என்னுடன் இருந்த ஒரே ஒருவர் நீங்கள்தான். என்றென்றைக்கும் எனக்கு நிலையானவர் நீங்கள் மட்டும்தான். உங்கள் ஒருவரால்தான் என் வாழ்வில் எந்தவொரு இடத்தையும் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் நான் அப்படி எதையும் உங்களிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியாது. உங்களை இதயம் நிறைய நேசிக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Tags : Genelia ,
× RELATED மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு