×

ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் அனிருத் அழுதது ஏன்?

எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் இசை அமைப்பாளர் அனிருத் சமீபத்தில் கண்ணீர்விட்டு அழுதார். எதற்காக அழுதார் என்பதை தர்பார் பட ஆடியோ விழாவில் உருக்கமாக கூறினார். ‘தலைவருக்கு நல்ல ஆல்பம் கொடுக்குறீங்கன்னு பலர் என்னிடம் சொல்கிறார்கள். தலைவருக்காக நான் உயிரையே கொடுப்பேன், ஆல்பம் தர மாட்டேனா. நான் தலைவர் வெறியன். நான் நன்றாக மியூசிக் பண்ணுவேன் என்று 8 வருஷத்துக்கு முன்பு என்னை கண்டுபிடித்தவர் தனுஷ் சார் தான். அவருக்கு நன்றி.

அவர்தான் என்னை அறிமுகம் செய்து வைத்தார். நான் ஒருபோதும் அழ மாட்டேன். ஆனால் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் அழுதுவிட்டேன். உலகத்துக்கே பிடித்த தலைவர் ரஜினிக்கு நான் இசை அமைத்திருக்கிறேன். அதை எண்ணியபோது என்னையும் அறியாமல் மகிழ்ச்சியில் அழுகை வந்தது. நான் தலைவர் ரசிகனாக இருப்பதற்கு பெருமைப்படுறேன். அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார், அது ரஜினி சார்’ என்றார் அனிருத்.

Tags : Anirud ,recording studio ,
× RELATED விக்னேஷ் சிவன் - சிவகார்த்திகேயன் - அனிருத் அமைத்துள்ள மெகா கூட்டணி