×

ரஜினியின் 168-வது படத்தில் இணையும் பிரகாஷ்ராஜ்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தினை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை இயக்கிய சிவா இந்த படத்தை இயக்குகிறார். ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன், பேட்ட என 2 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ், 3வது முறையாக ரஜினியுடன் இணைகிறது.

இதனால் ரசிகர்கள் இடையே இந்த படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த படத்தின் தலைப்பு, மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக நடிக்க உள்ளார். மேலும் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சன்பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Tags : Prakashraj ,Rajini ,
× RELATED ரஜினியிடம் ஆதரவு கேட்கும் போது...