நடனப்பயிற்சி அளிக்கும் நடிகை

தமிழில் கண்ணன் வந்தான், சபாஷ், பாளையத்து அம்மன், வேதம், ஆண்டான் அடிமை படங்களில் ஹீரோயினாக நடித்தவர், மலையாள நடிகை திவ்யா உன்னி. கடந்த 2002ல் அவருக்கும், டாக்டர் சுதிர் ஷேகராவுக்கும் திருமணம் நடந்தது. பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட திவ்யா உன்னி, 2 குழந்தைகள் பெற்றார். 14 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2016ல் கணவரை விவாகரத்து செய்தார்.

2018ல் அருண்குமார் என்ற இன்ஜினியரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். தற்போது அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் நகரில் வசிக்கும் திவ்யா உன்னி, அங்கு நடனப் பள்ளி தொடங்கி பரத நாட்டிய பயிற்சி அளிக்கிறார். தற்போது அவர் இரண்டாவது கணவர் மூலம் கர்ப்பமாக  இருக்கிறார். சில நாட்களுக்கு முன் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

Tags :
× RELATED நடன கலைஞர் மயங்கி விழுந்து பலி