×

49 வருடங்களுக்கு பிறகு இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட சாரதா

1960களில் இருந்து 90கள் வரை திரையுலகில் கதாநாயகி தொடங்கி அம்மா கதாபாத்திரம் வரை நடித்துள்ளவர் சாரதா. இவர் ஊர்வசி விருதும் பெற்றிருக்கிறார். (அந்த காலத்தில் தேசிய விருது ஊர்வசி என்ற பட்டப் பெயரில் வழங்கப்பட்டது). தமிழில் குங்குமம், துளசி மாடம், அருணகிரிநாதர், வாழ்க்கை வாழ்வதற்கே, துலாபாரம், ஞான ஒளி, நினைத்ததை முடிப்பவன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். கேரளாவில் நடந்த திரைப்பட விழாவில் சாரதா நடித்த படங்கள் திரையிடப்பட்டன. மலையாளத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1972ம் ஆண்டு அவர் நடித்த சுவயம்வரம் என்ற படம் திரையிடப்பட்டது. முன்னதாக இந்த விழாவில் சாரதா, அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

அடூர் கோபாலகிருஷ்ணன் பேசும்போது,’சுவயம்வரம் படத்தில் நடிக்க சாரதாவிடம் அணுகியபோது அவர் 25 ஆயிரம் சம்பளம் கேட்டார். அந்த காலத்தில் அது மிகப்பெரிய தொகை. ஏனென்றால் படத்தின் மொத்த பட்ஜெட்ேட இரண்டரை லட்சம்தான். ஆனாலும் சாரதா நடித்தால்தான் அந்த கதாபாத்திரம் நன்றாக இருக்கும் என்பதால் இயக்குனர் சம்பளத்தை குறைத்துக்கொண்டு சாரதா கேட்ட தொகை தரப்பட்டது’ என்றார்.

பின்னர் பேசிய சாரதா,’அன்றைக்கு நடந்த சம்பவத்துக்காக அடூர் சாரிடம் நான் இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சுவயம்வரம் படம் நிச்சயம் வெற்றிபெறும், விருது பெறும் என்று அப்போது என்னிடம் சொன்னார்கள்.  ஆனால் அப்படம் எனக்கு தேசிய விருது வாங்கித்தரும் என்று நான் எண்ணவில்லை. அதேபோல் இயக்குனர் அடூருக்கும் தேசிய விருது கிடைத்தது’ என்றார்.

Tags : Sarada ,
× RELATED மறியலில் ஈடுபட்ட 49 பேர் கைது