மீண்டும் அமெரிக்கா பறந்த அனுஷ்கா; இந்த வெயிட், ஒரே தொல்லையா போச்சு..

பாகுபலி முதல்பாகம் வரை நடிகை அனுஷ்கா தனது உடற்கட்டை ஸ்லிம்மாக பராமரித்து வந்தார். இஞ்சி இடுப்பழகி பட கதாபாத்திரத்துக்காக 100 கிலோ வெயிட்போட்டு நடித்தார். அதன்பிறகு அவரது உடல் எடையை குறைக்க படாத பாடுபட்டு வருகிறார். சுமார் ஒரு வருடம் புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாமல் உடல் இளைப்பதற்காக கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மேற்கொண்டார்.
 
கடந்த ஆண்டு அமெரிக்கா சென்ற அனுஷ்கா சிகிச்சை மேற்கொண்டார். எதிர்பார்த்தளவுக்கு எடை குறைக்க முடியவில்லை. குறைந்தவரை போதும் இந்தியா திரும்பியவர் ‘நிசப்தம்’ என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அவ்வப்போது அனுஷ்கா பொது நிகழ்ச்சிக்கு வரும்போது அவரது தோற்றத்தை பார்ப்பவர்கள் இன்னும் அவர் புஷ்டியாகவே இருப்பதாக கமென்ட் பகிர்கின் றனர். இதையடுத்து மீண்டும் அமெரிக்கா பறந்திருக்கிறார் அனுஷ்கா. இம்முறை 3 வாரங்கள் தங்கி சிகிச்சை பெற்று தேவையான அளவு உடல் எடையை குறைக்க முடிவு செய்திருக்கிறார்.

Tags : Anushka ,America ,
× RELATED இயக்குனரிடம் அனுஷ்கா அதிருப்தி