×

மீனவ குப்பத்தில் மேக்னா

மீனவ குப்ப கதையாக உருவாகிறது எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும். இதுபற்றி பட இயக்குனர்கள் கே.எஸ்.சரவணன், அபுபக்கர் கூறியது:
மீனவ குப்ப தலைவர் சந்திரா அங்குள்ள மக்களுக்கு உதவுகிறார். இது அதே குப்பத்தில் உள்ள 4 படகு உரிமையாளர்கள் தொழிலுக்கு பாதிப்பாகிறது. எனவே அவர்கள் சந்திராவை தீர்த்துக்கட்ட எண்ணுகின்றனர். திடீரென்று சந்திரா காணாமல் போகிறார். காணாமல்போன தனது தாயை தேடத் தொடங்குகிறான் மகன். அதன்பிறகு திடுக்கிடும் சம்பவங்கள் அம்பலத்துக்கு வருகிறது.

சந்திரா பாத்திரத்தில் விஜி சந்திரசேகர் நடிக்கிறார். கிரண் ஹீரோ. மேக்னா, மோனிகா ஹீரோயின்கள். சாப்ளின் பாலு, தென்னவன் டிஎன்எஸ் சின்னவர் ஆகியோ ருடன் என்ஜாய்ராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அபிநயா ராஜா சிங் தயாரிக்கிறார். சிவசங்கரன் ஒளிப்பதிவு. தேவ் ஓங்கார் இசை. புதுக்கோட்டை அறந்தாங்கி, கோட்டை பட்டினம், ஜெகதாபட்டணம், மணல்மேல்குடி, பேச்சிப்பாறை, நாகர்கோவில் பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

Tags : Magna ,Pisces ,
× RELATED மீனம்