மம்மூட்டி பட நடிகைக்கு ஆசிட் வீச்சு மிரட்டல்

மம்மூட்டி நடித்த படம் ‘பேரன்பு’. ராம் இயக்கியிருந்தார். இப்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்திருந்த அதேநேரத்தில்  கேரளாவைச் சேர்ந்த திருநங்கை அஞ்சலி அமீர் என்பவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஏற்கனவே வேறு சில படங்களிலும் அஞ்சலி அமீர் நடித்துள்ளார். நடிப்பு தவிர மாடலிங் துறையில் இருக்கிறார். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக ஆனஸ் விசி என்பவருடன் லிவிங் டுகெதர் பாணியில் அஞ்சலி அமீர் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஞ்சலி அமீர் ஃபேஸ்புக்கில் கண்ணீரும் கம்பலையுமாக கதறல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆண்டவன் படைப்பில் திருநங்கையாக இருக்கும் எனக்கு பெற்றவர்களிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.

அதனால் இதுபோன்றவர்களை நம்பி ஏமாறும் அவலம் ஏற்படுகிறது. என்னடமிருந்து ரூ.4 லட்சம் வரை ஆனஸ் பண மோசடி செய்திருக்கிறார். என் மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் தற்கொலை செய்யும் எண்ணத்திற்கு ஆளானேன். எனக்கு ஏதேனும் மோசமான நிலை வந்தால் ஆனஸ் விசிதான் காரணம் என்றும் அஞ்சலி அமீர் கூறி உள்ளார்.

Tags : Mammootty ,
× RELATED ஆசிட் வீச்சில் காயமடைந்த காவலர்கள்...