வர்ஷா பொல்லம்மா உஷ்ணம்

விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்தாட்ட சிங்கப் பெண்களில் ஒருவராக நடித்தவர் வர்ஷா பொல்லம்மா. இப்படத்திற்கு பிறகு வர்ஷா தனது கருத்துக்களை துணிச்சலாக பதிவிட்டு வருகிறார். ஐதராபாத்தில் பெண் டாக்டர் கடத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்தியா முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நடிகர் சிரஞ் சீவி, நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தசம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்ததுடன் குற்றவாளிகளை சுட்டு வீழ்த்த வேண்டும், பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வர்ஷாவும் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். ‘உங்கள் தங்கைகளுக்கு நீங்கள் பெப்பர் ஸ்பிரே பரிசாக வாங்கித் தாருங்கள். அது விலை குறைவானது தான். தங்கைகளை பாதுகாக்க உதவும். நம்ம விஜய் அண்ணன் சொன்னது போல் இந்த ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்யுங்கள்’ என தெரிவித்திருப்பதுடன் ஜஸ்டிஸ் ஃபார் திசா எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

Tags : Varsha Pollamma Heat ,
× RELATED கார் ஓட்டும்போது செல்பி; நடிகையின் டிரைவிங் லைசென்ஸ் பறிபோகிறது?