பிரபுதேவா படத்துக்கு சிக்கல்

இந்தியில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள படம் தபங் 3. இந்த படம் இம்மாதம் 20ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியில் சாமியார்கள், மேற்கத்திய நடனம் ஆடும் காட்சிகள் இடம்பெறுகின்றன. இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

‘இந்த படத்தில் சாமியார்களை இழிவுபடுத்தியுள்ளனர். எனவே படத்தை தடை செய்ய வேண்டும்’ என சென்சார் போர்டுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இந்த சர்ச்சையை பற்றி பிரபுதேவா பதில் எதுவும் கூறவில்லை. படத்திலிருந்து இந்த காட்சியை நீக்க மாட்டோம் என தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Prabhu Deva ,
× RELATED நெல் கொள்முதல் பிரச்னையா? புகார் தெரிவிக்கலாம்