ஐதராபாத் பங்களாவை விற்றேனா? ரகுல் பிரீத் ஆவேசம்

மும்பையில் இருந்து தென்னிந்தியாவுக்கு வந்து தமிழ் மற்றும் தெலுங்கில் கணிசமான படங்களில் நடித்தவர், ரகுல் பிரீத் சிங். தற்போது சிவகார்த்திகேயன் படத்திலும், கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் நடித்து வரும் அவர், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பதால், ஐதராபாத்தில் குடியேறுவதற்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா வாங்கினார்.

மேலும் ஜிம், உணவகம் போன்றவற்றையும் சொந்தமாக நடத்தி வரும் அவர், திடீரென்று புதுப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். வழக்கமான ஹீரோயினாக நடிக்க விரும்பவில்லை என்று காரணம் சொன்ன அவர், தெலுங்கில் தனக்கு புதுப்பட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், ஐதராபாத்திலுள்ள பங்களாவை விற்றுவிட்டு, மும்பையில் நிரந்தரமாக குடியேறிவிட்டதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து ஆவேசப்பட்ட ரகுல் பிரீத், ‘நான் எதுவும் சொல்லாமல், என்னைப் பற்றி எதற்காக இதுபோன்ற தகவல்களை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஐதராபாத்தில் குடியேறுவதற்காகத்தான் பங்களா வாங்கினேன். பிறகு ஏன் அதை நான் விற்க வேண்டும்? உண்மை இல்லாத இதுபோன்ற தகவலுக்கு பதில் சொல்லி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை’ என்றார்.

Tags : bungalow ,Hyderabad ,
× RELATED முட்டுக்காடு கடற்கரையோரம் விதிகளை...