ஷூட்டிங்கில் புகுந்த யானை ஆண்ட்ரியா ஓட்டம்

காட்டில் ஷூட்டிங் நடந்தபோது அந்த இடத்துக்கு யானை வந்ததால் ஆண்ட்ரியா உள்பட படக்குழுவினர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். புதியவர் நாஞ்சில் இயக்கும் படம் கா. இதன் ஷூட்டிங் கடந்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கியது. இதுவரை படம் திரைக்கு வரவில்லை. அவ்வப்போது இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படம் முழுக்க காட்டு பகுதிகளில் படமாகிறது. இதில் ஹீரோ கிடையாது. ஆண்ட்ரியா கேரக்டருக்கு முக்கியத்துவம் அளித்து படத்தை உருவாக்கி வருகின்றனர்.

படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் மூணாறில் உள்ள காட்டு பகுதியில் படமானது. அப்போது திடீரென ஸ்பாட்டுக்கு யானை ஒன்று வந்துவிட்டது. அப்போது அங்கு நடித்துக்கொண்டிருந்த ஆண்ட்ரியா, துணை நடிகர்கள், படக்குழுவினர் அலறியபடி ஓடினர். பாதுகாப்பு பணியில் இருந்த நபர்கள் துரிதமாக செயல்பட்டு, யானையை அந்த பகுதியிலிருந்து விரட்டினர். அதன் பிறகு படப்பிடிப்பு தொடர்ந்தது.

Tags :
× RELATED மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் நடிகர் ரஜினிகாந்த்